|
லகர
மெய்யையும், ளகர மெய்யையும் இறுதியில் கொண்ட சொற்கள் வல்லினம், மெல்லினம், இடையினம்
என்னும் மூவின மெய்களை முதலாகக் கொண்ட வருமொழிகளோடு அல்வழி, வேற்றுமை ஆகிய
இருபொருளிலும் புணரும் முறை பற்றி நன்னூலார் கூறும் பொதுவிதியையும் சிறப்பு
விதிகளையும் விளக்கிச் சொல்கிறது.
னகர,
லகர மெய்களின் முன்னும், ணகர, ளகர மெய்களின் முன்னும் வருமொழி முதலில் வருகின்ற தகர
மெய்யும், நகர மெய்யும் அல்வழிப் புணர்ச்சியிலும், வேற்றுமைப் புணர்ச்சியிலும்
எவ்வாறு திரியும் என்பது பற்றி நன்னூலார் கூறுவனவற்றை விளக்கிச் சொல்கிறது.
|