எல்லாம், எல்லாரும், எல்லீரும் என்னும் பெயர்கள், தான், தாம் முதலான மூவிடப்
பெயர்கள், ஆ, மா, கோ என்னும் ஓர் எழுத்துப் பெயர்கள்,
அவ், அஃது முதலான சுட்டுப்பெயர்கள்
ஆகியவை வேற்றுமை உருபுகளோடு புணரும்போது இடையே சாரியைகள் வரும் முறைமையை விளக்கிச்
சொல்கிறது. உயிர் ஈற்றுப் புணர்ச்சி, மெய் ஈற்றுப் புணர்ச்சி ஆகிய இருவகைப்
புணர்ச்சியிலும் வேற்றுமைக்குக் கூறப்பட்ட சில பொதுவிதிகளினின்று இரண்டாம்
வேற்றுமை மாறுபட்டு அமைவதைக் குறிப்பிட்டு
விளக்குகிறது. |