2.4 தொகுப்புரை

மொழி கருத்துப் பரிமாற்றத்திற்குத் துணை செய்யும் கருவி. அதில் பேச்சு வழக்கு, எழுத்து வழக்கு என இரு கூறுகள் உண்டு. இலக்கியச் சிறப்புடைய மொழிகள் செவ்வியல் மொழி என அழைக்கப்பட்டன.

உலகிலுள்ள செம்மொழிகளுள் தமிழும் ஒன்று.

தமிழ் மொழி திராவிட குடும்பத்தில் மூத்த மொழி. இதில் அமைந்த சொற்களும், சொல்லாக்கமும் சிறப்பு வாய்ந்தவை. தமிழ் மொழியில் வழங்கப்படும் பழமொழி, விடுகதை, இலக்கண வழக்கு ஆகியவை தமிழர்களின் பண்பாட்டுக் கருவூலங்களாக அமைந்துள்ளன.

எனவே, தமிழ்மொழி ஒரு பண்பட்ட மொழி என்பதோடு, அதன் இலக்கண வழக்குகளும், சொற்களும், பழமொழி போன்றவைகளும் தமிழர்களின் பண்பாட்டை வெளிப்படுத்துவனவாகக் காணப்படுகின்றன.

 

     தன் மதிப்பீடு : வினாக்கள் - II

1. இலக்கண வழக்கு எத்தனை வகைபடும்? அவை எவை?

2.இடக்கரடக்கல் எவ்வாறு தமிழர்களின் பண்பாட்டை வெளிப்படுத்தும்?

3. இறந்து விட்ட ஒருவனைத் ‘துஞ்சினான்’ என்று குறிப்பிடுவது எதைக் காட்டுகிறது?

4. குழூஉக்குறி என்றால் என்ன? அது எவ்வாறு பண்பாட்டுக்கூறாகக் கருதப்படுகிறது?