|
இந்தப்
பாடம் என்ன சொல்லுகிறது? |
 |
மனிதன், தனது கருத்தை வெளிப்படுத்துவதற்குக்
கிடைத்த ஒப்பற்ற கருவி மொழி. அந்த மொழி எவ்வாறு ஒரு
பண்பாட்டுக் கூறாகத் திகழ்கிறது என்பது பற்றிய
கருத்துகள்
இந்தப் பாடத்தில் இடம் பெறுகின்றன.
தமிழில் உள்ள ஓர் எழுத்து ஒரு சொல்,
அடைமொழி,
பழமொழி, விடுகதை முதலியன எவ்வாறு தமிழ்ப்
பண்பாட்டை வெளிப்படுத்துகின்றன என்பது எடுத்துக்காட்டுகளுடன் விளக்கப்படுகின்றன.
தமிழ் இலக்கண வழக்கில் ஒன்று தகுதி வழக்கு.
தகுதி
வழக்கில் இடம் பெற்றுள்ள இடக்கரடக்கல், மங்கலம்,
குழூஉக்குறி ஆகியவை வாயிலாக வெளிப்படும் தமிழர்
பண்பாடும் இந்தப் பாடத்தில் கூறப்படுகிறது. |