4.4 கல்வெட்டுகள்

c03110ad.gif (1294 bytes)

பழங்கற்கால மக்கள் ஓரிடத்திலும் நிலையாகத் தங்கி வாழ்ந்து வந்ததாகத் தெரியவில்லை. அவர்கள் இடம் விட்டு இடம் பெயர்ந்து கொண்டே இருந்தனர். பெரும்பாலும் சமவெளியில் வாழ்ந்து வந்தனர். சிற்சில நேரங்களில் காட்டு விலங்குகளுக்கு அஞ்சி மலைக் குகைகளில் ஒடுங்கி வாழ்ந்து வந்திருக்கின்றனர்.

தமிழிலுள்ள படிக்கும் நிலையிலுள்ள மிகப் பழைய வரி வடிவம், தமிழ் - பிராமி வரிவடிவமாகும். தமிழகப் பிராமிக் கல்வெட்டுகள் பிராகிருதச் சொற்கள் கலந்து தமிழ் மொழியிலே எழுதப்பட்டன எனப் பேராசிரியர் கே.கே.பிள்ளை, கமில் சுவெலபில், பேராசிரியர் தொ.பொ.மீனாட்சி சுந்தரனார் போன்றோர் குறிப்பிடுகின்றனர்.

கல்வெட்டுகளில் இடம் பெற்றுள்ள செய்திகளிலிருந்து, கல்வெட்டு எழுதப்பட்ட காலத்தில் வாழ்ந்த மக்களைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம். அவற்றின் மூலம் அவர்களது பண்பாட்டுக் கூறுகளையும் அறிந்து கொள்ளலாம்.

4.4.1 கல்வெட்டு உணர்த்தும் பண்புகள்

தமிழகத்திலுள்ள மாங்குளம் என்ற பகுதியில் ஒரு கல்வெட்டு கிடைத்துள்ளது. இது நெடுஞ்செழியன் என்ற மன்னன், சமண குருக்களுக்குக் குகைத்தானம் செய்த செய்தியைக் குறிப்பிடுகிறது.

இன்னொரு இடமாகிய புகளூர் என்ற பகுதியில் ஒரு கல்வெட்டு கிடைத்துள்ளது. இதில் நெடுஞ்செழியன் என்ற மன்னன், சமண குருக்களுக்குக் குகைத்தானம் செய்த செய்தி இடம் பெற்றுள்ளது.

மேற்குறிப்பிட்ட கல்வெட்டுச் செய்திகளிலிருந்து பண்டைத் தமிழ் மன்னர்களின் ஈகைக் குணத்தை அறிய முடிகிறது.

  • கல்வெட்டுச் செய்திகள்
  • மேலும் அரசாங்கம் பெற்ற வரிகள், கோயில் அலுவலர்களின் தனித்தனிப் பணிகள், கோயிலைச் சார்ந்த நகைகள், சொத்துகள் உட்பட, பல செய்திகள் சோழர் காலக் கல்வெட்டுகள் மூலம் அறிய முடிகிறது. இவை அக்கால ஆட்சி முறையையும், வழிபாட்டையும் அறிந்து கொள்வதற்கு உரிய சான்றுகளாக உள்ளன.