தன் மதிப்பீடு : விடைகள் - I
| 3. வீரத்தைத் தமிழர் போற்றிய வண்ணம் காட்டுக. தமிழர் தமக்குச் சமமானவரோடு மட்டும் போரிடுவர். முதுகு காட்டுபவனைத் தாக்க மாட்டார். மார்பில் தைத்த வேல் முதுகை ஊடுருவிப் போவது மானக்கேடு எனக் கருதினர். போரில் புண்பட்டு இறப்பவரே வான உலகம் செல்ல முடியும் என்று கருதினர். |