தன் மதிப்பீடு : விடைகள் - II
| 3. | இருவினை நீங்கச் சிந்தாமணி கூறும் போர்முறை எப்படிப்பட்டது? மெய்ஞ்ஞானத் தேரில் ஏறி உணர்வுக் குதிரைகளை இயக்கி, சன்மார்க்கம் என்ற யானையைக் கொண்டு, கருணை என்ற படைவீரர் உதவியுடன் நல்லொழுக்கம் என்ற கவசம் பூண்டு, மெய்ப்பொருள் என்ற வாளும் கேடயமும் தாங்கிப் போர் செய்ய வேண்டுமென்று சிந்தாமணி கூறுகின்றது. |