தன் மதிப்பீடு : விடைகள் - I

2.

அம்பிகாபதியின் கதையைச் சுருக்கமாகக் கூறுக.

அம்பிகாபதி கம்பர் மகன். அவன் இளவரசி அமராவதி மீது காதல் கொண்டான். இருவரின் காதல் அரசனை எட்டியது. அம்பிகாபதியைக் கொன்றுவிட அரசன் ஆணையிட்டான். கம்பர் அம்பிகாபதிக்கு உயிர்ப்பிச்சை வேண்டினார். அகப்பொருள் கலவாமல் நூறுபாடல்கள் பாடினால் உயிர்ப்பிச்சை அளிப்பதாக அரசன் கூறினான். அம்பிகாபதி பாடினான். அமராவதி கடவுள் வாழ்த்தையும் சேர்த்து எண்ணவே, தொண்ணூற்றொன்பது பாடல்களே முடிந்த நிலையில், நூறு முடிந்தது என்று எண்ணி அம்பிகாபதி அகப்பொருள் பாடலைப் பாடவே, தண்டனை நிறைவேற்றப்பட்டது. காதலனைப் பிரிந்த அமராவதியும் உயிர்விட்டாள்.