|
மனிதனைப் பண்புள்ளவனாக ஆக்குவதற்கு அறநூல்கள்
பயன்படுகின்றன. வாழ்க்கையில் கொள்ளத்தக்கன எவை,
தள்ளத்தக்கன எவை என்று இந்நூல்கள் கற்பிக்கின்றன.
நல்லது தீயதைப் பகுத்துக் கூறுகின்றன. அறநெறி நிற்பதால்
வரும் பயன்களையும், அறமல்லாத தீநெறிச் செல்வதால்
விளையும் கேடுகளையும் அறநூல்கள் எடுத்துரைக்கின்றன.
வாழ்க்கைக்கு உறுதி சேர்ப்பது அறம். தமிழ் நூல்கள் காட்டும்
அறக்கொள்கைகள் தமிழரின் பண்பாடு எவ்வளவு சிறப்புடையது என்பதைக் காட்டுகின்றன.
|