4.6 தொகுப்புரை

சைவமும் வைணவமும் தமிழ்நாட்டில் பக்தி இயக்கத்தை வலிமை மிக்கதாக வளர்த்தன. கோயில்கள் பெருக இந்தச் சமயங்கள் ஆற்றியுள்ள தொண்டு மிகவும் பெரியது. சாதி பேதமற்ற சமரசத்தை இந்தச் சமயங்கள் வளர்த்தன; தமிழை வளர்த்தன; மக்களிடையே கலந்து பழகும் ஒரு சமுதாய உணர்வையும் இவை உருவாக்கின. திருஞானசம்பந்தரும், திருநாவுக்கரசரும், குலசேகரரும், இராமானுஜரும் பேணிவளர்த்தது நம் தமிழ்ப் பண்பாடு. வேறுபட்ட சமயங்களுக்கிடையில் ஒரு பண்பாட்டுக் கயிறு ஊடாடிக்கிடப்பதை நாம் காணலாம். இதுவே தமிழகத்தின் மிகப் பெரிய வலிமை. இச்செய்திகள் இப்பாடத்தின் வழியே கூறப்பட்டன.

 

தன் மதிப்பீடு : வினாக்கள் - II

  1. தொண்டரடிப்பொடி ஆழ்வார் திருமாலின் திருவடிகள் எதனைவிடச் சிறந்தது என்கிறார்?

  2. பிரபத்தி என்பது யாது?

  3. திருவாய்மொழியைப் பாடியவர் யார்?

  4. பெரியாழ்வார் கனவில் திருமால் என்ன கூறினார்?

  5. குலசேகரர் திருமலையில் எவ்வாறு இடம்பெற எண்ணினார்?

  6. இராமானுஜர் தவறு செய்துவிட்டதாகத் திருக்கோஷ்டியூர் நம்பி கூறியபோது இராமானுஜர் யாது கூறினார்?