தன் மதிப்பீடு : விடைகள் - II

4.

கிறித்துவர்களின் பண்பாடு தமிழரிடையே உண்டாக்கிய புதுமைகளை எழுதுக.

குடுமி நீக்கிக் கிராப் வெட்டிக் கொள்ளுதல், ஐரோப்பிய உடை உடுத்துதல், பெண்கள் தலைமுடி குறைத்து உதட்டுச்சாயம் பூசிக்கொள்ளுதல், மதுவருந்துதல், புகைபிடித்தல், கிளாரினெட், பாண்ட் இசை, மேலைநாட்டுக் காய்கறிகள் உணவில் இடம் பெறல் ஆகியன தமிழரிடையே கிறித்துவர் வரவால் தோன்றிய புதுமைகளாகும்.