தன் மதிப்பீடு : விடைகள் - II

1. திருமலை நாயக்கர் மகால் பற்றிக் குறிப்பு வரைக.

இத்தாலிய சிற்பியால் வரைபடம் வரைந்து அமைக்கப்பட்டது திருமலை நாயக்கர் மகால். இதன் சுதைத்தூண்கள் 40 அடி உயரமுள்ளவை. குதிரைச் சிற்பங்கள் அழகு செய்யும் படிகளைத் தாண்டினால் கொலுமண்டபம் வரும். நவராத்திரி விழாவின் போது மன்னர் இங்குக் கொலுவிருப்பார்.