இந்தப்
பாடம் என்ன சொல்கிறது? |
|
காப்பியங்களைப் பேரிலக்கியம் அல்லது பெரிய
இலக்கியம் எனக் கூறுவர். அவற்றைவிட அளவில்
சிறியதாகவும், சில செய்திகளைக் கூறுவதாகவும் இருப்பன சிற்றிலக்கியம் எனப்படும்.
சிலப்பதிகாரம்,
மணிமேகலை, சிந்தாமணி என்பன பேரிலக்கியங்கள். திருக்கோவையார், மூவருலா, மதுரைக் கலம்பகம்,
அற்புதத் திருவந்தாதி, தமிழ்விடுதூது ஆகியன சிற்றிலக்கியங்கள்.
பேரிலக்கியங்கள் என்பவை
இக்கால நாவல்களைப் போன்றவை;
சிற்றிலக்கியங்கள்
என்பவை இக்காலச் சிறுகதைகளைப் போன்றவை.
சிற்றிலக்கியங்கள் என்ன வகையான பண்பாட்டைக்
காட்டுகின்றன? இங்குக் காணலாமே! |