| |
|
இந்தப்
பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்? |
-
ஐரோப்பியர் தமிழ்நாட்டுக்கு
வந்ததையும், அவர்கள் இங்கே தங்களை நிலைநிறுத்திக் கொண்டதையும் அறியலாம்.
-
இந்திய நாட்டின் பொதுவான
பண்பாடு, தமிழ்நாட்டின் தனிச்சிறப்பான பண்பாடு ஆகியவற்றையும், வேற்றுப் பண்பாடுகள்
உள்ளே நுழைந்ததையும், அதனால் தமிழ் மொழிக்கும் மக்களுக்கும் ஏற்பட்ட தீங்குகள்
பற்றியும் அறியலாம்.
-
தீமையிலும் நன்மை விளைவது போல,
அந்நியர் ஆட்சியில் உண்டான முன்னேற்றம், வளர்ச்சி ஆகியவற்றையும் இனம் காணலாம்.
-
இலக்கியத்திலும், சமூகத்திலும்,
பெண்களின் நிலையிலும் ஏற்பட்ட மாற்றங்களைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம்.
|
|
|