தன் மதிப்பீடு : விடைகள் - II 3. வ.வே.சு.ஐயர் பற்றிக் குறிப்பு எழுதுக. வ.வே.சுப்பிரமணிய ஐயர் இலண்டனில் வழக்கறிஞர் கல்வி பயிலும் போது புரட்சி வீரர் வீரசாவர்க்கர் அவர்களுக்குத் துணை நின்றவர். பாரதி நடத்திய இந்தியா பத்திரிகையில் தொடர்ந்து எழுதியவர். மணியாச்சியில் ஆஷ் துரையைச் சுட்டுக் கொன்ற வாஞ்சிநாதனுக்கும் இவருக்கும் தொடர்பு உண்டு. இவர் திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். |