5.0 பாட
முன்னுரை நீண்ட கால அடிமை இருளிலிருந்து இந்தியா விடுதலை பெற்றது. கி.பி.1947ஆம் ஆண்டு ஆகஸ்டு பதினைந்தில் தன் விடுதலைப்பாட்டை இந்தியா வானவெளியெலாம் ஒலிக்க முழங்கியது. 'இரவில் வாங்குகின்றனர் என்று விடியுமோ' என்று புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அன்றே பாடியதை இன்றும் புதுக்கவிதை என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். மாநிலங்கள் மத்திய ஆட்சிக்குட்பட்ட அமைப்பில் புதிய இந்தியாவை உருவாக்கும் பணியில் ஈடுபட்டன. மொழிவழி மாநிலங்கள் தவிர்க்க முடியாத தேவையாகி மாநிலங்கள் பிரிவுபட்டன. இன்றுவரை மாநிலங்களின் பிரிவுகள் பெருகிக் கொண்டே இருக்கின்றன. மாநிலங்களின் எல்லைகள் சிக்கலுக்குள்ளாயின. இவ்வாறு ஒரு பெரிய கூட்டமைப்பிலிருந்து துண்டு துண்டாக மொழி அடிப்படையிலான பிரிவுகள் பிறக்கும் ஒரு நிலை தவிர்க்க முடியாத ஒன்றாக உருவாகிவிட்டது. அவ்வாறு உருவான பிறகு ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு வகையான பண்பாடு அமைந்திருப்பது தெளிவாகப் புலனாகியது. |