இந்தப்
பாடம் என்ன சொல்கிறது? |
|
மாற்றம் என்ற ஒன்றுதான் மாற்றமின்றி நிகழ்கிறது
என்பர் அறிஞர். அந்த நிலையில் நிகழ்காலத் தமிழர்
பண்பாடு
பற்றிய மாற்றங்களை இந்தப் பாடம்
காட்டுகிறது. தமிழக நில எல்லையில் விளைந்த மாற்றம், தமிழ்
மொழியின் புழக்கத்தில் ஏற்பட்ட மாற்றம்,
பண்பாட்டைச் சிதைக்கின்ற சாதியத்தின் வேர்கள்
பரிந்து போற்றப்படும் மாற்றம், அரசியல் கட்சிப்
பூசல்களால் சமுதாயத்தின் நற்பண்புகள்
குலையும்
மாற்றம், சமுதாயத்தின் ஒருபகுதி அறநெறி நோக்கிலிருந்து உள்ளம் மாறி
வன்முறையில் நம்பிக்கை
கொண்டுள்ள மாற்றம் ஆகியன நிகழ்காலப்
பண்பாட்டில் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளன.
பெண்கள் முன்னேறிக் கொண்டிருக்கின்றனர். பொருளாதார நிலைமை கூடியிருக்கிறது. அறிவாற்றல்
கூர்மையாய் இருக்கிறது. கல்வி அறிவுச் சிந்தனைகள்
பெருகியிருக்கின்றன
- என்றாலும் அடித்தளப்
பண்பாட்டில் சில அசைவுகள் ஏற்பட்டிருக்கின்றன
என்பதை
இந்தப் பாடம் எடுத்துரைக்கின்றது. |