1.0 பாட முன்னுரை |
ஒரு நாட்டில் நடைபெறும் நிகழ்வுகளின் தொகுப்பை நாம் வரலாறு என்று கூறுகிறோம். நாட்டு வரலாற்றை எழுத அகழ் ஆய்வு, கல்வெட்டு, செப்பேடு, நாணயம், முத்திரை, ஓலைப் பட்டயம், இலக்கியம், வெளிநாட்டார் குறிப்புகள் ஆகியவை பயன்படுகின்றன. அவற்றில் கல்வெட்டும், நாணயமும் மிகவும் முக்கியமானவை. இவை பற்றிய செய்திகள் அறிமுக நிலையில் இங்குத் தொகுத்துக் கூறப்படுகின்றன. |