பழங்காலத்தில் பொருள்களை
வாங்கவும், விற்கவும்
பண்டமாற்று முறையே பயன்பட்டது. ஒரு பொருளைக் கொடுத்து வேறு ஒரு
பொருளைப் பெறுகின்ற முறை பண்டமாற்று முறை எனப்படும். பசு முதலிய
கால்நடைகளையும், ஆபரணங்களையும், உலோகத் துண்டுகளையும்
பொருள்களைப் பரிமாறிக் கொள்ளப் பயன்படுத்தினர். நாணயம்
அச்சுக்கருவி மூலம் வார்க்கப்பட்டது.
|
தாமிரம், வெள்ளி, தங்கம்
முதலிய உலோகங்களால்
நாணயங்கள் ஏற்பட்டது வணிகத்தில் ஒரு பெரிய திருப்பு
முனையாக அமைந்தது.
காவிரி, அமராவதி, வைகை, தென்பெண்ணை,
பாலாறு
முதலிய ஆற்றுப்படுகைகளில் நடந்த அகழ்வாராய்ச்சிகளில்
நாணயங்கள் குவியலாகவும், தனியாகவும் கிடைத்தன. வரலாற்றை
எழுத வேறு சரியான சான்றுகள் கிடைக்காதபோது நாணயங்கள்
மிகச் சிறந்த ஆதாரமாகத் திகழ்கின்றன.
நாணயங்களில்
ஆட்சியாளர்கள் பெயர்கள் எழுதப்பட்டிருப்பதால்
கல்வெட்டுகளைப்போல் அவை வரலாற்றுக்கு உதவுகின்றன.
|
|
|
சோழர் காசு
|
|
சுந்தரபாண்டியன் காசு
(முன்பக்கம், பின்பக்கம்)
|
|