3.0 பாட முன்னுரை |
ஒரு சமுதாயத்தின் நாகரிக வளர்ச்சிக்குக் கலையும், இலக்கியமும் சிறந்த எடுத்துக்காட்டுகளாகும். கலையைக் கவின்கலை, பயன்கலை என்று இரண்டு பிரிவாகக் கூறுவர். இசை போன்றவற்றைக் கவின்கலை அல்லது அழகுக்கலை என்றும், கட்டடக்கலை போன்றவைகளைப் பயன்கலை என்றும் கூறுவர். கலை மனத்திற்கு இன்பம் தரவல்லது; மகிழ்ச்சியூட்டக்கூடியது. கலை வெறும் பொழுதுபோக்குக்கு மட்டும் உரியது அல்ல; தமிழ்நாட்டில் கலை சமயத்தோடு தொடர்புடைய தெய்வீகக் கலையாக விளங்குகிறது. சமுதாய நிகழ்ச்சிகளின் பதிவாகப் பண்பாட்டை எடுத்துக்காட்டுவது இலக்கியம். இலக்கியம் கடந்த காலத்தைக் காட்டும் கண்ணாடியாகவும் பயன்படுகிறது. கலை பற்றியும் இலக்கியம் பற்றியும் இப்பாடத்தில் பார்க்கலாம். |