|
3.4 தமிழின் பெருமை |
தமிழ்மொழிமீதும்,
தமிழ்நாட்டின்மீதும் மிகுந்த
பற்றுக்கொண்ட மக்கள் பலர் தங்கள் பெயர்களிலேயே தமிழைத்
தாங்கித் தமிழ்நாட்டில் வாழ்ந்தனர் என்பதைக் கல்வெட்டுகளிலும்,
செப்பேடுகளிலும் காணுகின்றோம். தமிழுக்குச் சிறப்புமிக்க
அடைமொழிகளைக் கொடுத்தே அவர்கள் தமிழ்மொழியைக்
குறித்துள்ளனர் என்ற செய்திகளையும் காணுகின்றோம்.
|
3.4.1 அடைமொழிகளும் பெயர்களும் |
பராந்தக வீரநாராயணன் என்ற
பாண்டிய மன்னனின்
தளவாய்புரச் செப்பேட்டில் பல இடங்களில் தமிழ், சிறப்பு
அடையுடன் குறிக்கப்பட்டுள்ளது. |
‘அருந்தமிழின் பாத்தொகுப்பின்
பயன் உணர்வோன்’
‘திருமலி சாசனம் இதற்குச் செழுந்தமிழ் பாடினோன்’
‘சீர்மிகு செப்பேட்டினுக்குச் செந்தமிழில் பாத்தொடை
தொடுத்தோன்’
‘வண்டமிழ்க்கோன் அதிகாரி’
(தளவாய்புரச்
செப்பேடு) |
என்பன தளவாய்புரச் செப்பேட்டில்
காணும் தொடர்கள்.
இச்செப்பேடு ஆரியம் விராய்த்
தமிழ் கொடுத்ததாகக்
கூறப்படுகிறது. (ஆரியம் விராய் -
வடமொழி கலந்து) இதன் தமிழ்ப்
பகுதியைப் பாடியவன் பெயர் ‘பாண்டித் தமிழாபரணன்‘
என்பதாகும்.
பிற்காலப் பல்லவ மரபினன் கோப்பெருஞ்சிங்கனைக்
கல்வெட்டுப் பாடல் ஒன்று ‘பேணு செந்தமிழ் வாழப் பிறந்தவன்’
என்று புகழ்கிறது. தமிழின் பெருமையும் சிறப்பும் இதன்மூலம்
தெரிகிறது. |