4.0 பாட முன்னுரை |
சமய நம்பிக்கையும் அதன் பயனாகிய இறை வழிபாடுமே பிற உயிரினங்களிலிருந்து மனிதனை வேறுபடுத்துகிறது. உடல் வளத்துக்கு உணவும், அறிவு வளத்துக்குக் கல்வியும் எப்படித் தேவைப்படுகிறதோ அதுபோல் உயிர் வளத்திற்குச் சமய நம்பிக்கையும், வழிபாட்டு நெறிகளும் தேவைப்படுகின்றன. தெய்வ நம்பிக்கை அல்லது உணர்வு, அதன் செயலான வழிபாடு இவ்விரண்டின் காரணமாகக் கடைப்பிடிக்கப்படும் ஆன்மீகக் கோட்பாடுகளே சமயம் எனப்படுகிறது. பண்டைய இலக்கியங்கள் சமயம், வழிபாடு பற்றிய பற்பல செய்திகளைக் கூறுகின்றன. அரிசி சோறாகச் சமைக்கப்பட்டு உண்ண உணவு ஆவதுபோல் மனித குலத்தைச் சமைப்பது, அதாவது பக்குவப்படுத்துவது சமயம் எனப்படுகிறது. கல்வெட்டுகளில் சமயம் பற்றிய செய்திகளும், வழிபாட்டு முறைகளும் எவ்வாறு கூறப்படுகின்றன என்பது பற்றி இப்பாடத்தில் காணலாம். |