சமய அடியார்களும்,
ஊர்களும், நிலங்களும், பல
பொருள்களும் அன்று பெற்றிருந்த பெயர்கள் அவர்களின் ஆழ்ந்த
சமய நம்பிக்கையையும், சமய
ஈடுபாட்டையும், சமயத்
தொடர்பையும் காட்டுகின்றன. மக்கள் தங்கள் குழந்தைகட்குச்
சமய அடியார்கள் பெயரைக் குறிப்பாகத் தேவார
மூவர்,
நாயன்மார் பெயர்களையே பெரும்பாலும்
வைத்தனர்.
திருஞானசம்பந்தன், நாவுக்கரசன், ஆலாலசுந்தரன், தம்பிரான்
தோழன் என்ற பெயர்களைக் கல்வெட்டில் காணுகின்றோம்.
|