4.4 தொகுப்புரை | |||||||||||||||||||||||
பழங்காலத்தில் சமய நம்பிக்கையும் கடவுள் வழிபாடும் கடைப்பிடிக்கப்பட்டு வந்ததை அறிந்தீர்கள். சங்ககாலத்திலேயே கோயில்கள் இருந்ததையும், ஐவகை நிலத்திற்கும் தனித்தனியே தெய்வங்களை உரிமையாக்கியதையும் படித்தோம். நடுகல்லே தெய்வமாக மாறியது என்பதையும் பிற்காலப் பல்லவர், பாண்டியர், சோழர் ஆகியோர் கற்கோயில் கட்டியதையும் அறிந்தீர்கள். சைவ, சமண, பௌத்த மடங்கள் சமய வளர்ச்சிக்கும், சமுதாயப் பணிக்கும் இருப்பிடமாக விளங்கின. மருத்துவக் கல்லூரி அமைத்து மருத்துவப் பணிகள் செய்யப்பட்டன. பல சமயங்கள் இருந்தபோதிலும் சமயப்பொறை காணப்பட்டது. மக்கள் கோயில்களுக்குச் சென்று இறைவனை வழிபட்டனர். மன்னர்களின் பிறந்த நாள் அன்று கோயில்களில் வழிபாடு நடைபெறக் கொடைகள் கொடுக்கப்பட்டன. கோயிலில் விளக்கேற்றுதல் புண்ணிய செயலாகக் கருதப்பட்டது. மலர் வழிபாடு செய்ய கோயிலில் நந்தவனம் அமைத்தனர். சமயமும் வழிபாடும் எந்த வகையில் சிறப்புற்றிருந்ததன என்பதனைக் கல்வெட்டுகள் கூறுகின்றன. |
|||||||||||||||||||||||
|