வரி அல்லது
கடமை என்பது அக்காலத்தில் அரசின்
முக்கிய வருவாயாக இருந்தது. நிலத்தின் மீதும், தொழிலின்மீதும்,
வணிகத்தின்மீதும் இவை விதிக்கப்பட்டன.
ஆனாலும்
பெரும்பாலான கொடை நிலங்கள் இறையிலி என்று
வரி
நீக்கப்பட்டிருந்தன. பிற்காலக் கல்வெட்டுக்கள் மூலம் குறவன்,
கூத்தாடி, தொட்டியர், தொம்பர், பட்டர், புலவர், மறவர், மாணிக்கி,
வலையர், வேட்கோவர், ஆண்டிகள் போன்ற சமூகத்தார்க்குச் சில
ஊர்களில் அல்லது சில உள்நாட்டுப் பகுதியில் வரி இல்லை என
அறிவிக்கப்பட்டிருந்தது.
|