தன் மதிப்பீடு : விடைகள் - I

3. “பெண்கொலை புரிந்த நன்னன்” - விளக்கம் தருக.

தன் அரண்மனைத் தோட்டத்திலிருந்து உதிர்ந்து, நீரில் மிதந்து சென்ற மாங்காயை அறியாமல் உண்ட இளம்பெண்ணை, அவள் பெற்றோர் அவள் எடையளவு பொன்கொடுக்க முன்வந்தும் ஏற்றுக் கொள்ளாமல், கொலை செய்த கொடுமையாளன் நன்னன் என்ற மன்னன். புலவர்களும் பொதுமக்களும் அவனை வெறுத்தனர். அவன் நரகத்துக்குச் செல்வான் என்றே நம்பினர்.