2.3 தொகுப்புரை

இதுவரை ஐங்குறுநூற்றில் அமைந்த அகத்திணைக் கொள்கைகள் சிலவற்றைக் கண்டோம். இவற்றைச் சுருக்கமாக மீண்டும் ஒருமுறை காண்போம்.

முப்பொருள்கள் எவை என்பது பற்றியும், அவை ஒவ்வொரு திணைப் பாடலிலும் இடம் பெற்றுள்ள திறத்தையும் கண்டோம்.

ஒரு திணைக்குரிய பொழுதும் கருப்பொருள்களும், மற்றொரு திணையில் மயங்கும் என்பதும், அவை மயங்கிய திறத்தையும் கண்டோம்.

திணைப் பாடல்களுக்கு வலிமை சேர்க்கும் உவமை அதன் இரு கூறுகளான உள்ளுறை உவமம், ஏனை உவமம் என்ற அடிப்படையில், பாடல்களில் பயின்றுள்ளமையை அறிந்தோம்.

தன் மதிப்பீடு : வினாக்கள் - II
1

உள்ளுறை உவமையில் எந்தக் கருப்பொருள் இடம் பெறாது?

விடை
2

உள்ளுறையாய் அமைந்த மருதக் கருப்பொருள் இரண்டைக் கூறுக.

விடை
3

உள்ளுறை எந்தத் திணையில் மிகுதியாக இடம் பெற்றுள்ளது?

விடை
4

ஏனை உவமத்தின் இருவகை எவை?

விடை