5.0 பாட முன்னுரை |
அகநானூறு, ஓர் அக இலக்கியம். அதாவது ஒப்பாரும் மிக்காரும் இல்லாத ஒரு தலைவனும் தலைவியும் காதலிப்பதும், பின் முறைப்படித் திருமணம் செய்துகொள்வதும், காதலிக்காமலேயே பெற்றோர் திருமணம் செய்து வைப்பதும், திருமணத்தின்படி இல்வாழ்க்கை மேற்கொள்வதும் ஆகிய நிகழ்வுகளைக் கூறும் இலக்கியம் ஆகும். காதலிக்கின்ற நிகழ்வுகளைக் களவு என்ற பெயராலும் இல்வாழ்க்கை நிகழ்வுகளைக் கற்பு என்ற பெயராலும் இலக்கணங்கள் குறித்துள்ளன. இந்த அகப் பொருள் மரபுகள் அகநானூற்றில் அமைந்துள்ள திறத்தை இப்பாடம் விளக்குகிறது. |