பாடம் - 5

D01125 அகநானூறு - 2

இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

இந்தப் பாடம் அகநானூற்றின் அகப்பொருண்மை பற்றியது. அகநானூற்றில் அமைந்துள்ள முதல், கரு, உரிப்பொருள்களின் ஆட்சி பற்றி விவரிக்கிறது. அகப்பொருள் நிகழ்வுகளான துறைகளைக் கூற்றுகள் வழி விளக்குகிறது.


இந்தப்பாடத்தைப் படிப்பதால் என்ன பயன்பெறலாம்?

இந்தப் பாடத்தைப் படித்து முடிக்கும்போது நீங்கள் கீழ்க்காணும் திறன்களையும் பயன்களையும் பெறுவீர்கள்.

  • அகநானூற்றில் அமைந்துள்ள அகத்திணை மரபுகள் பற்றி அறியலாம்.
  • ஐந்திணைக்குரிய முப்பொருள்கள் குறித்து அறியலாம்.
  • அகப்பொருள் மாந்தர்களை அறியலாம்.
  • அகப்பொருள் நிகழ்வுகள் குறித்து அறியலாம்
  • அகப்பொருள் மாந்தரின் கூற்றுகளை அறியலாம்.
பாட அமைப்பு