அக்காலத்தில் பொழுதுபோக்கின் கூறாகவும் வழிபாட்டின் அங்கமாகவும் விழாக்கள் நடந்துள்ளன.
திங்களை உரோகிணி கூடுகின்ற நிறைமதி (பௌர்ணமி) நாளில் மாலை நேரத்தில் தெருக்களில் மாலைகள்
தொங்கவிட்டு, விளக்குகளை ஏற்றிக் கார்த்திகை விழாக் கொண்டாடியுள்ளனர்.
இதுபோலவே, கொங்கு நாட்டவர் உள்ளி விழா என்ற விழாவை நடத்தியுள்ளனர். (368) |