6.6 தொகுப்புரை |
இல்லறம் என்ற குடும்ப வாழ்க்கை, பல சடங்குகளைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. திருமணம் பல வகைகளையும் பல முறைகளையும் கொண்டுள்ளது. பிள்ளைப்பேறு இம்மைக்கும் மறுமைக்கும் இன்றியமையாதது. மக்கள் தமக்காகவே மட்டுமல்லாமல் பிறர்க்கெனவும் வாழ்ந்துள்ளனர். தனி மனித ஒழுக்கங்கள் சிறப்பாக அமைந்திருந்தன. கடவுளர் நம்பிக்கையோடு கதைகளும் வழக்கத்தில் இருந்தன. வாழ்க்கைக்கு ஆதரவாகப் பல்வேறு தொழில்கள் நடைபெற்றன. பொழுதுபோக்கிற்காகவும் சமயச்சடங்கிற்காகவும் விழாக்களை நடத்தினர். அரசர்கள் ஒருவருக்கொருவர் பகைகொண்டு போரிட்டுக் கொண்டனர். நாடி வந்தோருக்குப் பொருள் வழங்கினர். இச்செய்திகள் அக்காலச் சமுதாய நிலையைக் காட்டுவதாக அகநானூற்றில் இடம்பெற்றுள்ளன. |