தன் மதிப்பீடு
: விடைகள் - I |
||
4. புறநானூற்றின்
இரண்டாம் பாட்டின் கருத்தைத் தருக. |
||
மண் செறிந்த நிலம், நிலத்திற்கு மேல்
ஓங்கிய வானம், வான்வெளியைத் தடவி வரும் காற்று, அக்காற்றால் இயக்கப்படும் தீ, அத்தீயோடு மாறுபட்ட நீர் ஆகியன ஐம்பெரும் பூதங்கள். இவற்றின் குணங்களைப் போலப் பகைவரது பிழையைப் பொறுத்தல், பகைவரை அழிக்கச் சிந்திக்கும் ஆழ்ந்த சிந்தனையின் அகலம், மனவலி, பிறரைத் தண்டிக்கும் ஆற்றல், பிறர்க்கு அருள் செய்தல் ஆகிய குணங்களைக் கொண்ட சேரலாதனே ! அசைந்த கழுத்துமயிர் பொருந்திய குதிரையைக் கொண்ட பால் புளித்தாலும் பகல் இருண்டாலும், நான்கு வேத
நெறி |
||