2.7 தொகுப்புரை

பாடமாக அமைந்துள்ள புறப்பாடல்கள் வீரம் கூறுவன, கொடை மேம்பாடு கூறுவன, வாழ்வியலுக்கு வேண்டும் உறுதிப் பொருள் கூறுவன என்ற மூன்று பகுப்பில் அடங்கக் காணலாம். இப்பாடல்களைப் பாடியவர்களில் வேந்தர்களும் உள்ளனர் என்பது எண்ணுதற்குரியது.

தன் மதிப்பீடு : வினாக்கள்- II
1. பெருந்தலைச் சாத்தனாரின் குடும்ப நிலை எத்தகையது?
2. உலகம் நிலை பெற்றிருப்பதற்குரிய காரணம் யாது?
3, கல்வியின் சிறப்பைப் பாண்டியன் அறிவுடை நம்பி கூறுமாறு வரைக.