தன்
மதிப்பீடு : விடைகள் - I
1. புறநானூறு எத்தகைய செய்திகளைக் கூறுகின்றது? புறநானூறு வாழ்விற்கு உதவும் பேருண்மைகளை உணர்த்தும் பல பாடல்களைக் கொண்டது. நல்லது செய்ய முடியாவிட்டாலும் தீயது செய்யாதிருங்கள் (195); மகிழ்ச்சியும் துன்பமும் நிறைந்தது இவ்வுலகம். இங்கு நல்ல செயல்களை அறிந்து செய்க (194); புகழ் என்றால் உயிரைக் கொடுக்கக் கூடிய, பழியென்றால் உலகத்தையே தந்தாலும் ஏற்றுக் கொள்ளாத சான்றோர் வாழ்வதாலேயே இவ்வுலகம் நிலை பெற்றிருக்கிறது (182); பொருளும் இன்பமும் அறத்தின் வழியே செல்லுதற்குரியன (31); நிலம் எத்தகையதாயினும், அங்கு வாழ்வோர் நல்லவராயின் நிலமும் நல்லதே (187); கல்வி என்ற தகுதியால் கீழான குடியிற் பிறந்த ஒருவனும் உயர்வாக எண்ணப் பெறுவான் (183) என்பன போன்ற வாழ்விற்காகும் உயர்ந்த கருத்துகளைப் புறநானூறு கூறுகின்றது. |
|