தன் மதிப்பீடு : விடைகள் - I

3. செவியறிவுறூஉ என்பதை விளக்குக.

அறவோர் மற்றவர்களுக்கு நல்ல நெறிகளைக் கற்பித்து அவற்றின் வழி நடக்க அறிவுறுத்துவர். இவ்வாறு செய்யும் செயல் செவியறிவுறுத்தல் எனப்படும். “அன்பும் அறமும் மறவாது போற்றுக” என்றும் “கொள்கை மிக்க சான்றோர் கூறும் வழியில் நடக்க” எனவும், “ஞாயிறு போன்ற வீரத் திறமையும், திங்களைப் போலக் குளிர்ந்த நோக்கமும் கொண்டு வறுமைப் பட்டோர்க்கு உதவி வாழ்க” எனவும், “உலகம் நிலையாதது என்பதை உணர்ந்து, நிலையான அறச் செயல்களைப் பேணுக” எனவும் கூறும் துறை செவியறிவுறூஉ எனப்படும்.

முன்