தன் மதிப்பீடு : விடைகள் - II

2. பெற்றபோது மகிழ்ந்ததைவிட எப்போது தாய் மிக மகிழ்ச்சி அடைவதாக நச்செள்ளையார் கூறுகின்றார்?

"போரில் என் மகன் அஞ்சி முதுகிட்டிருப்பின் என்னிடத்து அவன் பால் உண்ட என் மார்புகளை அறுத்தெறிவேன்” என்று வஞ்சினம் கூறிக் கையில் கொண்ட வாளோடு களத்திற்குச் சென்றனள். அங்கு வாளினால் பிணங்களைத் திருப்பித் திருப்பிப் பார்த்துக் கொண்டே வந்தவள் பிணங்களை மேலும் துழாவும்போது, குருதியால் சிவந்துபோன அப்போர்க்களத்தில் மார்பிற் புண்பட்டு உடல் சிதைந்து வெவ்வேறு பகுதியாகத் தன் மகன் கிடப்பதைக் கண்டு அவனைப் பெற்ற நாளில் அடைந்த மகிழ்ச்சியை விடப் பெரிதும் மகிழ்ந்தனள் அத்தாய்.

முன்