தன்
மதிப்பீடு : விடைகள் - I
1. பதிற்றுப்பத்து நூல் பற்றி விளக்குக. பத்துச் சேர அரசர்களைப் பற்றிப் பத்துப் புலவர்கள் ஒருவருக்குப் பத்துப் பாடல்களாகப் பாடியுள்ள நூறு பாடல்களின் தொகுப்பாக இந்நூல் விளங்குகின்றது. பத்து + பத்து = பதிற்றுப்பத்து (இடையில் சாரியை இடம் பெற்றது). இன்று இந்நூலில் முதற்பத்தும் இறுதிப் பத்தும் கிடைக்கவில்லை. எஞ்சிய எட்டுப் பத்துகளின் எண்பது பாடல்கள் கிடைத்துள்ளன. |