தன்
மதிப்பீடு : விடைகள் - II
1. பேரெழில் வாழ்க்கை என்னும் பாட்டு செங்குட்டுவனைக் குறித்துக் கூறுவன யாவை? கடலில் மிக்க துன்பங்களுக்கு இடையே பகைவருடன் கடும்போர் செய்து, வென்று பெருஞ்செல்வங்களைக் கொண்டு வந்தாய். அவ்வாறு அரிய முயற்சியால் பெற்ற பொன்னையும் பொருளையும் இரக்கக் குணத்தினால் மிக எளிதாக வாரி வழங்கி விடுகிறாய். அதுவும், உன் புகழைச் சிறப்பாகப் பாடும் திறமையில்லாதவர்கள் பாடும் தகுதியற்ற பாடல்களுக்கு! இதனால் உன்னை, ‘பாட்டின் தரம் உணர இவன் உண்மையில் கல்லாதவன்’ என்று எண்ணிக் கொண்டு அந்தப் புலவர்களும் பாணர்களும் தங்கள் சுற்றத்தாராகிய மற்ற கலைஞர்களின் கைகளை ஏந்தச் செய்து பொருள்களைப் பெற்றுக் கொள்கின்றனர் என்று பரணர் பாடுகிறார். |