தலைவியைக்
காண்பது; ஐயம் கொள்வது; மானுடப் பெண்ணே என்று துணிவது; இவற்றின்பின்
தலைவி தன்னை விரும்புகிறாளா என்பதை அறியும் ஆவல் தலைவனுக்கு ஏற்படும்.
அதற்காக, தலைவி ஏதேனும் குறிப்புக் காட்டுகிறாளா என்று நோக்குவது தலைவனது
இயல்பு. அதையே குறிப்பறிதல் என்று குறிப்பிடுவர்.
தலைமகள், தன் உள்ளத்தில் உள்ள தலைவன் மீதான
விருப்பத்தைக் கண்களின் வழிப் புலப்படுத்துவாள். இதுவே
அவள் காட்டும் குறிப்பாகும் என்பது இலக்கண வரையறை.
- அரிவை நாட்டம் (தலைவியின் கண்கள் காணும்
பார்வை)
- அகத்துநிகழ் வேட்கை (மன விருப்பம்)
- தெரிய உணர்த்தும் (வெளிப்படுத்தும்)
- குரிசிற்கு என்ப (தலைவனுக்கு)
என்பது அகப்பொருள் நூற்பா (6).
குறிப்பு
: காட்சி, ஐயம், துணிவு, குறிப்பறிதல் என்னும் இந்நான்கும் நிகழ்ந்த
பின்னரே (தலைவியின் காதல் குறிப்பு வெளிப்பட்ட பின்னர்) ஐந்திணைக்குரிய
களவு தொடங்கும். அதுவரை தலைவனிடம் மட்டுமே காதல் உணர்வு இருப்பதால்
இந்நான்கையும் கைக்கிளைக்குரிய படிநிலைகளாகவே ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார்.
|