வன்புறை
இருவகைப்படும். அவையாவன:
- ஐயம் தீர்த்தல்
- பிரிவு அறிவுறுத்தல்
ஐயம் தீர்த்தல்
தலைவிக்கு உண்டான ஐயத்தைத் தலைவன் தீர்த்து வைத்தல்
ஐயம் தீர்த்தல் எனப்படும். இது,
-
கலைந்துபோன தன் அணிகலனைச் சரிசெய்து
தலைவன் அணிவிக்க அது மாறுபட்டுள்ளதைக் கண்டு தோழி ஐயுறுவாள்
என்று கருதிய தலைவியின் ஐயம் தீர்த்தல்.
-
மீளவும் வருவேன் என்று, தான் கொண்டுள்ள
அளவுக்கதிகமான காதலைக் கூறித் தலைவன் ஐயம் தீர்த்தல்.
-
‘விதி நம்மைப் பிரிக்காது’ என ஊழின்
வலிமையைக் கூறித் தலைவியின் ஐயம் தீர்த்தல்.
என மூன்று உட்பிரிவுகளை உடையது.
பிரிவு அறிவுறுத்தல்
தலைவன் தன் பிரிவைத் தலைவிக்குத் தெரிவித்தல் பிரிவு
அறிவுறுத்தல் எனப்படும். இது வன்புறையின் இரண்டாம் வகை. இது,
- பிரியமாட்டேன் எனல்.
- பிரிந்து மறுபடியும் திரும்பி வருவேன்
எனல்.
- தான் பிரிந்து செல்லும் இடம் அருகில்தான் உள்ளது எனல்.
என மூன்று உட்பிரிவுகளை உடையது.
|