4.9 தொகுப்புரை

இப்பாடத்தொகுப்பில் பின்வரும் செய்திகளைக் கற்றுணர்ந்தோம்.

  • களவின் இலக்கணம்
  • களவும், கந்தர்வமும் ஒன்றிவரும் நிலை.
  • காட்சி, ஐயம், துணிவு, குறிப்பறிதல் என்னும் கைக்கிளையின் வகைகள்.
  • இயற்கைப் புணர்ச்சி, வன்புறை, தெளிவு பற்றிய செய்திகள்.
  • கற்பு வாழ்வின் அமைப்பும் அவ்வாழ்வில் மேன்மேலும் தலைவன் மேற்கொள்ளும் புணர்ச்சிகளும்.
  • தலைவியால் அடையும் இயற்கைப் புணர்ச்சியின் விரிவுகள்.
  • இடந்தலைப்பாடு, பாங்கன் கூட்டம் பற்றிய செய்திகள்.

மேற்கண்ட செய்திகளை அறிவதன் மூலம் பண்டைத் தமிழ் இலக்கணம் வரையறுத்து வழங்கும் களவு பற்றிய நெறிமுறைகளையும், மரபுகளையும் அறிந்து இன்புறலாம்.

தன் மதிப்பீடு : வினாக்கள்-II
1.
வன்புறை என்றால் என்ன? அதன் இரு பிரிவுகள் யாவை?

விடை

2.
பிரிவுழி மகிழ்ச்சி என்னும் கிளவியை விளக்குக.

விடை

3.
இடந்தலைப்பாடு என்றால் என்ன? அது எத்தனை வகைப்படும்?

விடை

4.
பாங்கன் கூட்டத்தின் வகைகள் எத்தனை? அவை யாவை?

விடை

5.
கீழே தந்துள்ளவைகளுக்கு வரையறை தருக. (1) தெளிவு (2) மருளுற்று உரைத்தல் (3) எதிர்மறை (4) பாங்கிற் கூட்டல்

விடை