5.0 பாட முன்னுரை

நாற்கவிராசநம்பி இயற்றிய அகப்பொருள் விளக்கத்தின் இரண்டாம் இயல் களவியல் ஆகும். அவ்வியல் களவொழுக்கம் பற்றிய இலக்கணக் கூறுகளை விளக்குகிறது. இப்பாடப்பகுப்பில் களவியல் செய்திகளின் ஒரு பகுதி (நூற்பா 22 முதல் 46 வரை) இடம் பெறுகிறது.

  • பாங்கி மதி உடன்பாடு
  • பாங்கியிற் கூட்டம், அதன் விரிவுகள்.
  • பகற்குறி, இரவுக்குறி.

என்பன பற்றிய விளக்கங்களை இப்பாடத்தில் கற்று உணரலாம்.