பாங்கி எனப்படும்
தோழி தலைவன் கருத்துக்கு உடன்படுதல் பற்றியும், அவள் வழியாக
நிகழும் தலைவன் - தலைவி கூட்டம் பற்றியும் கூறுகிறது.
அக்கூட்டம் பகலிலும் இரவிலும் நிகழ்வதற்கான
குறியிடங்கள், அவற்றுள் ஏற்படும் இடர்ப்பாடுகள்,
(அல்லகுறிப்படுதல்) முதலான களவியல் செய்திகளையும்
இப்பாடப் பகுப்பு விளக்குகிறது.
|