நாற்கவிராசநம்பி
இயற்றிய அகப்பொருள் விளக்கம் என்னும் இலக்கண நூலின் இரண்டாம்
இயல் களவியல் ஆகும். அவ்வியலின் செய்திகள் மூன்று பாடத் தொகுப்புகளில்
விளக்கப்படுகின்றன. பாடம் நான்கு (களவியல் - I) முதல் 21 நூற்பாக்கள்
பற்றியும், பாடம் ஐந்து (களவியல் - II) அடுத்து வரும் 25 நூற்பாக்கள்
பற்றியும் விளக்கம் தந்தன.
இப்பாடம்
களவியலின் இறுதிப் பகுதியாக எஞ்சியுள்ள 47-54 வரையுள்ள 8 நூற்பாக்களை
விளக்குவதாக அமைகிறது. இப்பாடத்தில்
- வரைதல் வேட்கை
- வரைவு கடாதல்
- ஒருவழித் தணத்தல்
- வரைவிடை வைத்துப் பொருள்வயின் பிரிதல்
என்னும் நான்கு கிளவிகளுக்குரிய செய்திகள் விளக்கப் பெறுகின்றன.
|