தன் மதிப்பீடு : விடைகள்-I
2. வரைதல் வேட்கையில் அச்சத்திற்குரிய விரிவுச்
செய்திகள் யாவை?

    வரைதல்     வேட்கையின்     ஒருவகையான
அச்சத்திற்குரிய செய்திப்பிரிவுகளாவன:

  1. தலைவியிடம், ‘உனக்கு ஏற்பட்ட துன்பம் யாது?’ எனத்
    தோழி கேட்ட போது, ‘அருமை வாய்ந்த களவு
    ஒழுக்கம் செவிலிக்குத் தெரிந்துவிட்டது’ என்று
    தலைவி கூறுதல்.

  2. தலைவன் வரும் வழியில் உள்ள இடர்ப்பாடுகளைப்
    பற்றித் தோழியிடம் தலைவி கூறுதல்.

  3. ஊரார் பழிதூற்றும் செயல் (அலர்) காரணமாக எழுந்த
    அச்சத்தால் தலைவி தோழியிடம் பேசுதல்.

  4. தலைவன் வரும்வழி பற்றிய அச்சத்தைத் தலைவி தோழியிடம் உரைத்தல்.

  5. தலைவன் வரும் வழியை விலக்குமாறு தோழியிடம் தலைவி கூறுதல்.

  6. தலைவன் தன்னைக் காணவரும் இரவுக்குறியைத்
    தடுத்து நிறுத்துமாறு (விலக்குமாறு) தலைவி
    தோழியிடம் கூறுதல்.

  7. தாய் வேலனை அழைத்து வெறியாட்டு நிகழ்த்துகிறாள்
    என்பதைச் சுட்டிக் காட்டித் தலைவன் வருவதைத்
    தடுத்து நிறுத்துமாறு தோழியிடம் தலைவி கூறுதல்.

  8. மாற்றார் மணம் பேச வருவதனைத் தடுத்து
    நிறுத்துமாறு தோழியிடம் தலைவி கூறுதல்.

முன்