உவர்த்தல்
உவர்த்தல் என்றால் வெறுத்தல் என்று பொருள். தோழி,
தலைவனை அவனது வருகையை வெறுத்து களவு
ஒழுக்கத்திற்கு உதவி புரியாமல் இருப்பாள். அது
உவர்த்தல் எனப்படும். அதன்பின் களவு முறையில்
தொடர்ந்து பழக வாய்ப்பில்லாமல் போகும். எனவே
தலைவனுக்கு வரைதல் வேட்கை ஏற்படும்.
ஆற்றாமை
தோழி உடன்படாமல் வெறுத்தல் காரணமாகத்
தலைவனது வருகை தடைப்படும். அவனது பிரிவைத்
தாங்கிக் கொள்ள இயலாமல் தலைவி வருந்துவாள்.
அதுவே ஆற்றாமை எனப்படும். தலைவிக்கு நிகழும்
ஆற்றாமை அவள் மனத்தில் திருமண விருப்பத்தை ஏற்படுத்தும்.
பொய்த்தல்
தலைவன் தலைவியை மணந்து கொள்ளும்படி செய்ய
நினைத்த தோழி தலைவனிடம் பொய்யான சில
செய்திகளைத் தானே புனைந்து கூறுவாள். இது
பொய்த்தல் எனப்படும்.
கழறல்
கழறல் - இடித்துச் சொல்லுதல் ; நேரடியாகச்
சொல்லுதல். ‘நீ தலைவியை மணந்து கொள்ளாமல்
தொடர்ந்து களவு முறையிலேயே இருத்தல் உன் நாட்டுக்கு ஏற்றதன்று ; உயர்
பண்பும் அன்று’ என்று தோழி தலைவனிடம் நேரடியாகக்
கூறுதல் கழறல் எனப்படும்.
|