தன் மதிப்பீடு : விடைகள்-II
1. ஒருவழித்தணத்தல் என்றால் என்ன?

    தணத்தல் பிரிந்து இருத்தல். தலைவியின் களவு ஒழுக்கம் ஊரார்க்குத் தெரிந்து பலரும் அது பற்றி இழித்தும், பழித்தும் பேசும் அலர் ஏற்பட்டது. அதனால் ‘தலைவியை உடன் மணந்து கொள்க பருவமும் வந்துவிட்டது’ என்று தோழி வரைவு கடாதல் மூலம் வற்புறுத்துவாள். பலர் தூற்றும் அலர் மறைய நான் எனது ஊருக்கு ஒரு முறை சென்று சிலகாலம் தங்கித் திரும்புகிறேன் என்று கூறித் தலைவன் பிரிந்து செல்வான். பகற் குறியிலும், இரவுக்குறியிலும் வருவதைத் தவிர்ப்பான். அதுவே ஒருவழித்தணத்தல் எனப்படும்.

முன்