சென்றுழிக் கலங்கல்
தலைவன் ஒருவழித் தணத்தலாகப் பிரிந்து சென்றபோது
அப்பிரிவைத் தாங்க இயலாத தலைவி மனம் கலங்கிப்
பேசுதல் சென்றுழிக் கலங்கல் எனப்படும்.
வந்துழி நொந்துரை
ஒருவழித் தணத்தலாகிய தற்காலிகப் பிரிவு முடிந்து,
திரும்பிவந்த தலைவனிடம் தோழி வருந்திப் பேசுதலும்,
அவ்வாறே தலைவிக்கும் தோழிக்கும் தன் பிரிவால்
ஏற்பட்ட துன்பம் பற்றித் தலைவன் வருந்திப் பேசுதலும்
வந்துழி நொந்துரை எனப்படும்.
வன்புறை
தலைவனது பிரிவு தேவையானது; அப்பிரிவை ஏற்றுப்
பொறுத்து ஆற்றியிருத்தலே பொருத்தமுடையது என்று
தோழி தலைவியிடம் வற்புறுத்திக் கூறுதல் வன்புறை
எனப்படும்.
வன்பொறை
தோழியின் வன்புறை அறிவுரைகளைக் கேட்ட
தலைவி, தலைவனது பிரிவால் ஏற்பட்ட துயரத்தைப்
பொறுத்துத் தாங்கிக் கொண்டு இருப்பாள். தலைவியின்
மெல்லிய இயல்புக்கு மாறான அம் மனஉறுதி -
‘வன்பொறை’ எனப்படும்.
|