பாடம் - 6

D02116 களவியல் - III

E
இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

இந்தப் பாடம் களவியலின் கிளவித் தொகைகளான வரைதல் வேட்கை, வரைவு கடாதல், ஒருவழித் தணத்தல், வரைவிடை வைத்துப் பொருள்வயின் பிரிதல் என்னும் நான்கையும் விளக்குகிறது.

வரைதல் வேட்கைக்கான காரணங்களையும் தலைவனை வரைவு (திருமணம்) செய்து கொள்ளுமாறு வேண்டும் தோழியின் செயல்பாடுகளையும், திருமணத்தை முன் வைத்து நிகழும் செயல்பாடுகளில் வெளிப்படும் தலைவன் தலைவியரது இயல்புகள் முதலான செய்திகளையும் இந்தப் பாடம் விவரிக்கிறது.

இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
  • வரைதல் வேட்கை, வரைவு கடாதல், ஒருவழித்தணத்தல், வரைவிடை வைத்துப் பொருள்வயின் பிரிதல் என்னும் நான்கின் இலக்கணத்தையும் அவற்றின் விளக்கங்களையும் அறியலாம்.
  • அச்சம், வெறுப்பு, ஆற்றாமை என்னும் மூன்று காரணங்களால் திருமண விருப்பம் நிகழும் என்பதை உணரலாம்.
  • தலைமக்களின் திருமணத்தை உறுதிப்படுத்த, தோழி மேற்கொள்ளும் பல்வேறு செயல்பாடுகளை அறியலாம். அவற்றின் மூலம் தோழியின் அறிவாற்றலை உணர்ந்து மகிழலாம்.
  • திருமணத்தை முன்வைத்துத் தலைவன் மேற்கொள்ளும் ஒருவழித் தணத்தல்,வரைவிடை வைத்துப் பொருள்வயின் பிரிதல் என்னும் இருவகைப் பிரிவு நிலைகளைக் கற்று உணரலாம்.
  • வன்புறை, அலர், வெறியாட்டு, காமம் மிக்க கழிபடர் கிளவி முதலான களவியல் துறைகளைப் பற்றிய விளக்கங்களை அறிந்து தெளிவு பெறலாம்.