1.0 பாட முன்னுரை |
நாற்கவிராச நம்பி இயற்றிய நம்பியகப் பொருள் என்னும் இலக்கண நூலின் மூன்றாம் இயல் வரைவியல் ஆகும். அது களவியலுக்கு அடுத்து அமைந்துள்ளது. |
களவு வாழ்க்கையில் ஏற்படும் இடையூறுகளை - தடைகளை- நீக்கி, காதல் வாழ்வை நிலைபெறச் செய்ய விழையும்போது அதற்குரிய தீர்வாக அமைவதே வரைவு (திருமணம்) ஆகும். அது பற்றிய இலக்கணச் செய்திகளை வரைவியல் வழங்குகிறது. |
வரைவியல் என்னும் மூன்றாம் இயலில் இடம் பெறும் இலக்கணச் செய்திகளை விளக்குவதாக இம்முதல் பாடமும் இதனை அடுத்து வரும் ஒரு பாடமும் அமைகின்றன. வரைவியலின் முதல் ஒன்பது நூற்பாக்களை உள்ளடக்கி விளக்குவதாக இப்பாடம் அமைகிறது. |
(1) வரைவின் இலக்கணம் |
(2) வரைவின் இருவகைக் கிளவிகள் |
(3) வரைவு மலிதலின் வகை |
(4) வரைவு மலிதலின் விரி |
(5) அறத்தொடு நிற்றலின் இருவகை |
(6) தலைவி அறத்தொடு நிற்கும் கிளவிகள் |
(7) பாங்கி அறத்தொடு நிற்கக் காரணம் |
(8) செவிலி அறத்தொடு நிற்கும் முறை |
முதலான செய்திகள் இப்பாடத்தில் இடம் பெறுகின்றன. |